சனி, 6 ஏப்ரல், 2013


கற்றாளை முட் செருகலாய் 
குற்றங்கள் உறுத்தும் போது 
தொடர்பாடல் துக்கமுறுகிறது 
உண்மையோடு பேசுதல் 
அவசியமாகிற வேளை 
தடுக்கும் "நான்" கள் 
அவலப்பட்டு நிற்கின்றன
வெளிப்படைகள் தீந்து 
தீர்வுகள் பொசுங்கிப் போகின்றன 
அமுங்கியிருக்கும் பதங்கள் 
அலறலாய் வெடிக்கையில் 
கேள்விக் குறிகள் 
இடைவெளியை நிரப்புகின்றன
சோகத்தோடு.... 

வி.அல்விற்.
03.04.2013.

2 கருத்துகள்:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

"கேள்விக் குறிகள்
இடைவெளியை நிரப்புகின்றன"

Michaelpillai சொன்னது…

நன்றி ஐயா பின்னூட்டத்துக்கு.