வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பொய்முள்


மலரின் வழி கீழிறங்கும் 
சிறுதண்டிலேதான் 
முட்கள் அமர்ந்திருக்கின்றன 
தொடுபவனைக் குறிபார்த்து 

மலரின் மேலிருந்தே 
பொய் முட்களால் கிழித்து 
சுருழ வைக்கும் 
கலையை
நீ கற்றுக் கொண்ட 
மூலத்தை 
ஆராய்ந்து வியப்பதில் 
வேதனையும் மறந்து விடுகிறது. 


Photo : மலரின் வழி கீழிறங்கும் 
சிறுதண்டிலேதான் 
முட்கள் அமர்ந்திருக்கின்றன 
தொடுபவனைக் குறிபார்த்து 

மலரின் மேலிருந்தே 
பொய் முட்களால் கிழித்து 
சுருழ வைக்கும் 
கலையை
நீ கற்றுக் கொண்ட 
மூலத்தை 
ஆராய்ந்து வியப்பதில்  
வேதனையும் மறந்து விடுகிறது. 

வி. அல்விற்.
29.08.2014.

வி. அல்விற்.
29.08.2014.


வார்த்தைப்பழு.


பஞ்சுப் பரப்பின் மீதானதொரு மேலுலகை 
எனக்காய் நான் படைத்துள்ளேன் 
என் கனவுகள் 
என்னோடு துரத்தி விளையாடுவதற்காய்

உன் கீறல் விழுந்த குரலை 
கேட்க விரும்பாதபடி 
ஒளிக்கதிர்களுக்குள் புதைந்து 
என்னை ஒளித்துக் கொண்டுள்ளேன் 

வந்து விடலாம்! 
மழைக் கழுவுதலின் பின்னான 
வானவில் பூத்த 
கதிரொளித் தெளிவான வார்த்தைகளை 
உன்னால் சுமந்துவர முடியுமானால் 

என்னோடு உன்னைச் 
சேர்த்துக் கொள்ளுகின்றேன்.


Photo : பஞ்சுப் பரப்பின் மீதானதொரு மேலுலகை 
எனக்காய் நான் படைத்துள்ளேன் 
என் கனவுகள் 
என்னோடு துரத்தி விளையாடுவதற்காய்

உன் கீறல் விழுந்த குரலை 
கேட்க விரும்பாதபடி  
ஒளிக்கதிர்களுக்குள் புதைந்து 
என்னை ஒளித்துக் கொண்டுள்ளேன் 

வந்து விடலாம்! 
மழைக் கழுவுதலின் பின்னான 
வானவில் பூத்த 
கதிரொளித் தெளிவான வார்த்தைகளை 
உன்னால் சுமந்துவர முடியுமானால் 

என்னோடு உன்னைச் 
சேர்த்துக் கொள்ளுகின்றேன்.

வி.அல்விற்.
27.08.2014.

வி.அல்விற்.
27.08.2014.



ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

தனிமரங்கள்.


இலையுதிர்க்கும் 
மரங்கள் கூட 
அழுவதில்லை 
அடுத்த துளிர்ப்பு 
நம்பிக்கையில் 

பிடிமானங்களின் 
உதிர்கையில் 
மனிதக் காடுகள் 
தனிமரங்களாகிக் 
கொண்டிருக்கின்றன 
இங்கே
அறிந்தும் அறியாமலுமாய்.

வி. அல்விற்.
24.08.2014.

ஆயுதம்


மௌனமும் 
காலக்கெடுவைக் 
கடந்து போனதில் 
புது ஆயுதம் தேடுகிறேன் 
உனக்கெதிராய்.








வி.அல்விற்.
23.08.2014.

தேடலின் ஓசை.

தேடலின் ஓசை.
எனது கண்களைக் கட்டி விட்டுக் 
காட்டில் அலைய விட்டுள்ளாய்
புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும் 

பெரும் பூச்சியான நீ.

என் வாய்களை மூடி வைத்து 
உண்ண மட்டுமே அனுமதித்து 
புத்தகங்களுள் மூழ்கி 
தத்துவம் பேசுகிறாய் நீ.

என் காதுகளை அடைத்து விட்டு 
சைகையில் அசைய விட்டு 
இன்னும் 
புத்தகங்களுள் அமிழ்ந்து 
அறிவு தேடுகின்றாய் நீ.

என் பட்டங்களைப் பறக்க விட்டு 
பைத்தியமாய் அலைய விட்டு 
புத்தகங்களுடன் பேசி 
புதுயுகம் படைக்கும் 
மேன்மை பேசுகிறாய் நீ.

என் ஆத்மா தொலைந்து 
அலைவதை உணராது 
புத்தகக் குவியலுக்குள் 
முகம் புதைத்துக் கிடக்கிறாய் நீ.

இதோ!
உன்னால் உன்னைத் தேட முடியாத 
உனக்காயும் 
உன்னைத் திருப்பித் தர முடியாத 
நூல்களுக்காகவும் 
பரிதாபப்பட்டு நடக்கிறேன் 
தனியே 
பழக்கப்பட்ட விதத்தில்

நீயோ இன்னும் 
அதே இடத்தில் 
முகம் புதைத்தபடி.



வி. அல்விற்.
24.08.2014.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

கடவுளின் பிரதிநிதிகள்

கடவுளின் பிரதிநிதிகள் 



இவர்களின் 
தந்திரங்களுக்கும் 
இவர்களின் 
வியாபாரங்களுக்கும் 
இவர்களின் 
வேற்றுமேசைப் பேச்சுக்களுக்கும் 
இவர்களின் 
கொடுக்கல் வாங்கல்களுக்கும் 
இவர்களின் 
அரக்கத்தனங்களுக்கும்

விலையாக.....

உடைந்த மனங்களுடனும் 
பிய்ந்த சதைகளுடனும் 
கடவுளின் கைப்பற்றுகின்றனர் 
கடவுளின் பிரதிநிதிகளான 
களங்கமில்லாக் குழந்தைகள் 

இவர்கள் 
இன்னும் 
தம் கையிருப்புக்களை 
விற்றுக் கொண்டிருக்கிறனர்
அறிவார்ந்தவர்களாக.

வி.அல்விற்.
10.08.2014.

முட்கள்


முட்கள் 

உன்னை வரித்துக் கொண்ட 
பேருவகைக்காய் 
காடெங்கும் 
வெறும் பாதத்தால் 
நடக்க வைக்கின்றாய் 

வெளிர்நிறப் பட்டாம்பூச்சிகள்
கூடப் பறந்து வரும் 
கனவுச் சிறகொடித்து 
விழிமுத்துக் கோர்த்து 
மாலை சூட்டுகிறாய் 

நாளை 
என்மீது வெளிர்நிற 
ஆடை போர்த்து 
வண்ணப் பூவிதழ்கள் 
தூவி மகிழ்வாயென 
கனவில் தேவதூதன் 
உரைத்ததில் மலர்கிறேன்.











வி. அல்விற்.
09.08.2014.

வாழ்த்துப் பா


வாழ்த்துப் பா 

முறைமைக்குள் வாழும் 
பெரு வாழ்வுக் கலை
அதிசயிக்க வைக்கிறது 

தனிமைக்குள் பிடிகழரா 
உறவுச் சிக்கல்களும் 
கருத்தாகிப் போகின்றன
நிரந்தரமாக 

ஒவ்வொரு இழையாகப் 
பின்னப்படும் வார்த்தைகள்
இருபக்கத் தேவைகளை 
நிறைவு செய்து முடிக்கின்றன 

கால ஓவியங்களாகி 
ஆங்காங்கே மாட்டப்படும் 
காவியங்களின் 
மறுபக்கங்கள் 
ஒளித்து வைக்கப்பட்டு
வாழ்த்துப் பா 
பாடப்படுகின்றது

வாழ்வாங்கு வாழ்ந்தமைக்காய்.

வி.அல்விற்.
08.08.2014.

மௌனம்.....

மௌனம்


மௌனம்..... 
கொன்றாலும்
பரிசீலிக்கிறது 
என்னை எனக்குள்ளே.

வி.அல்விற்.
08.08.2014.