வெள்ளி, 27 ஜூன், 2014

போதை.

போதை.

அத்தனை இலகுவானதாயில்லை 
படிகளில் ஏறுவது 
விழுந்து முறிந்து 
வலிகளில் வாழ்ந்து 
கசப்புக்களை மருந்துகளாக்கி 
எழுந்து வருகையில் 

இரட்டைக் குதிரை பூட்டிய 
இரதம் ஒன்று
இலாவகமாக ஏற்றிச் செல்லுகின்றது

இறங்கி நடக்க
சிவப்புக் கம்பள விரிப்பு
நீண்டு கொண்டே போகிறது
மெத்தெனக் கால்பதிகையில்
தேவலோக சுகமென
பாத நுனியிலிருந்து உச்சிவரை
சிலிர்க்கிறது மெய்

ஒவ்வொரு படப்பிடிப்பிலும்
கூசி அகலும்
ஒளித் தெறிப்பில்
நெஞ்சு மேலேறி இறங்குகின்றது
புளகாங்கிதத்தில்

செயற்கை ஒளி கூட
இத்தனை பிரகாசம் தருமா!
புன்னகைகளும் கையசைப்புக்களும்
எத்தனை இதமாயிருக்கிறது!

என்ன அற்புதம்!
தும்பியின் இறகுகள் கூட
இவ்வளவு இலகுவாயிருக்குமா!
பறக்கின்றது மனம்
ஒவ்வொரு பார்வையும்
வியந்து நோக்க
இன்னும் உயரே
ஆகாயம் தொடும் ஆனந்தம்

அத்தனை நட்சத்திரங்களையும்
அணைத்து விட்டு
ஒற்றை விளக்காய்
உலாவரும் பேரவா
உள்ளூர ஊற்றெடுக்க
மனம் மதர்த்துக் கிடக்கின்றது

யார் சொன்னது
போதை கள்ளில் உண்டென்று

உறிஞ்சிப் பாருங்கள்
புகழ்ச் சரக்கில் சிறிதை
ஆளை சிதறடிக்கும்
வெறியின் ஆட்டம் புரியும்

வி.அல்விற்.
27.06.2014.

ஆட்சி.

அகிலத்தின் ஆட்சிக் கையளிப்பில் 
மமதை கொண்டு மிதக்கிறாய்
பேரழகியின் விழியில் வீழ்ந்த 
காமுகன் போல கிறங்கியபடி 

நிறுத்த முடியாதுள்ளது உன்னால் 
உன்னைச் சுற்றிக் கட்டியுள்ள 
இறுமாப்புச் சுவருள்
உன் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டதான 
சிந்தனைச் சிறைக்குள் 
வாழ்க்கை அழுது வடிப்பதைப்
புரியாமலேயே போகின்றாய்

வியாபித்துக் கொண்டே போகும்
உனக்குள்
அழிபட்டுப் போகிறாய்
மழையின் பின் தோன்றியழியும்
வானவில்லாய்
மீட்க முடியாமல்

காலத்தின் கடப்புக்குள்
ஆடி முடிக்கும் வெறியோடு
வாதங்களும் பிரதிவாதங்களுமாய்
வாழ்வின் நுண்ணியல்கள் துச்சமாகி விட
வெறுமனே முடுக்குதலில்
சாய்(ர்)ந்து நடக்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளாய்
ஒழுங்கமைக்கப்பட்ட
இயந்திர மனிதன் போல

உன் மிதப்புக்களுக்குள் நீயும் நானும்
மாண்டு போக
பிரபஞ்சம்
இன்னொரு தலைமுறையைப்
பிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

வி.அல்விற்.
26.06.2014.

வலியிலும் உயிர்ப்பு.

மிச்சமிருக்கும் நாட்களைக் 
கணக்கில் கொள்ளுகின்றேன்
அடைந்து விடுவேனோ 
தெரியவில்லை 
வேண்டுதல்களும் தேடுதல்களுமாய்..... 

கணக்கற்ற நாட்கள் 
யுகங்களாய் நீழுகின்றன 
தொலைத்து விட்ட எதையோ தேடுமாப்போல 

அல்லது என்னையும் மீறி 
நான் விரும்பும் எதையோ 
பாய்ச்சலுடன் பற்றிக் கொள்வதற்காய் 


ஆவேசமும் ஆதங்கமுமாய்
அடிக்கடி களைப்பேறிய மூச்சு வாங்கலுடன்
மீண்டும் மீண்டும்
தொடக்கத்துக்கே வந்தாலும்
விட்ட இடத்திலிருந்தே வேகமேடுக்கின்றேன் 


கொளுத்திப் போடும் வார்த்தைகளும்
சிறகொடிக்கும் அகங்காரங்களும்
அண்டி முடக்காதபடி
அறிவுக்கு ஆணையிட்டுள்ளேன்
வலியிலும் உயிர்ப்பதற்கு
பற்றுதல்கள் அனைத்தையும்
என்னோடு சேர்த்தபடி.

வி.அல்விற்.
23.06.2014.

தூரங்கள் கடப்பாய்.

பெண்ணே!
உன் கண்கள் காவியம் பேசட்டும் 
காரியமும் அத்தோடு கூறட்டும் 
உன் நா கனிமொழி பேசட்டும் 
அதில் நேர்மை என்றுமே தெறிக்கட்டும் 

உன் நாசி நாசத்தை முகரட்டும் அதில் 
நாசனை எதிர்கொள்ளும் மூச்சிருக்கட்டும்
நலமே நெஞ்சினில் நிறையட்டும் 
நஞ்சு கொள் நெஞ்சத்தை மிதிக்கட்டும் 

பெண்ணெனும் பாவனை முடியட்டும்
பேதமைப் பொருளெனும் கூச்சல் அடங்கட்டும்
பொன்னெனத் தூக்கி பொத்திடும்
பொல்லாதோர் மூர்க்கம் அடக்கட்டும்

விண்ணெட்டும் சாதனை ஓங்கிடும்
வெறுப்பவர் இயலாமை ஒழியட்டும்
வீணென்று வீழ்த்திட எழுந்திடும்
வீணர்கள் உன் முன்னே வீழட்டும்

உன் கை ஊன்றி எழுந்திடு
உன் காலில் பலமாய் நின்றிடு
சிந்தையை முன்னோக்கி நகர்த்திடு
ஏளனம் செய்வோரை தாண்டிடு
எட்டிடும் ஏராள தூரங்கள்.

வி.அல்விற்.
19.06.2014.

நீ விரும்பினால்.

நீ விரும்பினால்.

உன்னை ஏந்தியுள்ள பூமி 
உனக்காகப் பரந்தே கிடக்கிறது 
நீ விரும்பினால் 
வழி நெடுக விதைத்துச் செல்ல முடியும் 
உன் கேள்விகளுக்கான விதைகளை 
முளை விடும் ஒவ்வொரு விதைகளும் 
உன் சுதந்திரத்தைப் பறை சாற்றும்

பாதையில் மேலெழும் புகழ்ப் பூக்களில்
மயங்கி நின்றிடும் நேரங்களைக்
கண்டு கொள்ள முடிகிறதா உன்னால்
அச்சமயம் எழும் நச்சு வாசனையில்
நோய் கவ்விக் கொள்ளுகிறதுன்னை

உன் ஆழுமையை அழித்தொழிக்கும் நோயது
சிந்தையை மழுங்கடித்து
சீர் குலைக்கும் நோயது
பிரித்தறிய முடியா பேதமைக்குள்
விழுத்தாட்டி
தொலைந்து போக வைக்கும் நோயது
உன் தொலைதலில்
அகங்காரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன
கைதட்டி ஆரவாரம் செய்கின்றன

கட்டுக்குள் இருந்து கவியெழுத முடியுமா
பெண்ணே!
உன் கைகளை சுதந்திரமாக வீசிக் கொள்
அற்புத வார்த்தைகளுக்குள்
அடிமைப் பட்டுக் கொள்ளாதே

உன்னை ஏந்தியுள்ள பூமி
உனக்காகப் பரந்தே கிடக்கிறது
நீ விரும்பினால்.....

வி.அல்விற்.
21.06.2014.

வெள்ளி, 20 ஜூன், 2014

நீ நீயேயாய்..

உன்னால் மாற முடியாது 
மீண்டும் மீண்டும் 
உனக்கு நீயே எதிரியாகிறாய் 
கடைந்தெடுத்த காடைத்தனமும் 
கட்டின்றி மிதக்கும் வெறித்தனமும் 
உன்னிடமிருந்து பிரிக்க முடியாதவை 

ஒரு காலம் மடித்து முடிப்பதற்குள் 
இன்னொன்றைப் புதிதாக 
எழுதத் தொடங்கியுள்ளாய் 
அத்தாட்சிப் பத்திரத்தில்
காயாத குருதி ஆணியால்

மிருகவதைகள் ஆழமாக
எதிர்கொள்ளப்படும் காலத்தில்
மனிதவதைகள் இலகுவாகிறது உனக்கு
நீ நீயாக இருப்பதில்
உலகுக்கு நட்டம் ஏற்படாத வரையில்
உன் நாட்டில்
மும்மாரி பொழிந்து கொண்டுதான் இருக்கும்
பெற்றுக் கொள் அமோக விளைச்சலை!
தூற்றிக் கொள் காற்றுள்ளபோதே!

வெப்பம் எரிக்கும் காலம் ஒன்று வரும்
உன் மக்கள் வாழும் நிலம்
வெடிப்பெறிந்து போகும்
ஒரு துளி நீருக்காய்
உன் தொண்டையில்
உயிர் சிக்கிக் கொள்ளும்

அப்போது
உன் கண்களில் தோன்றும் தவிப்பில்
இரக்கப்படுவோர்
இல்லாதிருப்பர் அருகில்

காலம் எப்போதும் யாருக்கும்
காத்திருப்பதில்லை.

வி.அல்விற்.
17.06.2014.

வலியும் வசந்தமும்.

வலியுடன் 
அசைந்து நடக்கிறாள் அப்பெண் 
முடிவில் கிடைக்கவிருக்கும் 
அளவிலா இன்பத்தைக் காண

ஆந்தைகள் அலறிக் கொண்டு 
தலைக்குமேலே பறக்கின்றன
புற்றிலிருந்து
வெளியசைந்து வரும் பாம்புகள்
அவளது கால்களை நெருங்க
மரமாய் நின்று நிதானிக்கிறாள்
இவளது பாதங்களை
அவை உரசிக் கொண்டு
இரைதேட
வேறிடம் நோக்கி நகருகின்றன

மழையில் குழைந்திருக்கும்
நிலப்பகுதியின் ஈரலிப்பு
நடையைக் கூட்ட
ஏதுவானதாயில்லை
இருப்பினும்
அவளைத் தடுப்பதற்கு
எதனாலும் முடியாது
மூர்க்கத்துடன் முன்னேறுகிறாள்

ஓரிடம் தேட வேண்டும்
அதற்குள் உட்பட்ட
காலப் பிரிவுக்குள்
மானிடப் பிசாசுகள்
பயந்து ஒதுங்கட்டும்
விசம் கொண்ட அனைத்தும்
விலகி ஓடட்டும்

தன்னுயிரோடு சுமக்கும்
கருவைப் பிரசவிக்க
ஓரிடம் தேட வேண்டும்

அதற்குள் வசந்த காலம்
வெளிச்சத்தை கொணர்ந்திருக்கும்.

வி.அல்விற்.
13.06.2014.

Photo : வலியுடன் 
அசைந்து நடக்கிறாள் அப்பெண் 
முடிவில் கிடைக்கவிருக்கும் 
அளவிலா இன்பத்தைக் காண
 
ஆந்தைகள் அலறிக் கொண்டு 
தலைக்குமேலே பறக்கின்றன 
புற்றிலிருந்து 
வெளியசைந்து வரும் பாம்புகள் 
அவளது கால்களை நெருங்க 
மரமாய் நின்று நிதானிக்கிறாள் 
இவளது பாதங்களை 
அவை உரசிக் கொண்டு 
இரைதேட 
வேறிடம் நோக்கி நகருகின்றன 

மழையில் குழைந்திருக்கும் 
நிலப்பகுதியின் ஈரலிப்பு 
நடையைக் கூட்ட 
ஏதுவானதாயில்லை
இருப்பினும் 
அவளைத் தடுப்பதற்கு 
எதனாலும் முடியாது
மூர்க்கத்துடன் முன்னேறுகிறாள்  

ஓரிடம் தேட வேண்டும் 
அதற்குள் உட்பட்ட 
காலப் பிரிவுக்குள் 
மானிடப் பிசாசுகள் 
பயந்து ஒதுங்கட்டும் 
விசம் கொண்ட அனைத்தும் 
விலகி ஓடட்டும்    

தன்னுயிரோடு சுமக்கும் 
கருவைப்  பிரசவிக்க 
ஓரிடம் தேட வேண்டும் 

அதற்குள் வசந்த காலம் 
வெளிச்சத்தை கொணர்ந்திருக்கும்.

வி.அல்விற்.
13.06.2014.

கண்ணீர்

எத்தனை இன்பம் கொட்டிக் கிடப்பினும்
வெடித்துச் சிதறி இரண்டு சொட்டுக்கள்
பெருமூச்சுடன் வெளியேறுகையில்
கண்களில் தூசுகள் மட்டுமல்ல
உடைபட முடியா இறுக்கமும்
கரைந்து கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது.

வி.அல்விற்.
11.06.2014.
Photo : எத்தனை இன்பம் கொட்டிக் கிடப்பினும் 
வெடித்துச் சிதறி இரண்டு சொட்டுக்கள் 
பெருமூச்சுடன் வெளியேறுகையில் 
கண்களில் தூசுகள் மட்டுமல்ல 
உடைபட முடியா இறுக்கமும் 
கரைந்து கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது.
வி.அல்விற்.
11.06.2014.

சமநிலை

அருவிகள் யார் கேட்டும் கொட்டுவதில்லை 
மழைத்துளிகள் அனுமதியுடன் நிலம் சேர்வதில்லை 
கடல் அலைகள் சொல்லிக் கொண்டு ஆர்ப்பதில்லை 
காற்று வழி கேட்டு அலைவதில்லை 
பருவகாலங்கள் மாற்றத்துக்குக் காத்திருப்பதில்லை 
இயற்கையின் பொதுமுறைச் சமநிலையை 
சைகைகளால் கைகோர்த்து சேர்ந்தே ஆள்கின்றன
பேதங்களும் வாதங்களும்
ஆதிக்கங்களும் அடித்து வீழ்த்துதல்களும்
துரோகங்களும் பல்லிளிப்புக்களும்
சொல்லவியலாச் சுயநலன்களுமாய்
பொதிகளைச் சுமந்து வருந்தி நலிந்து
முட்டி வலிக்க நிற்கின்றோம்
ஒருமைக்குள் வரவியலாமல்
மனிதர்களின் பெயரால்.

வி.அல்விற்.
11.06.2014.

Photo : அருவிகள் யார் கேட்டும் கொட்டுவதில்லை 
மழைத்துளிகள் அனுமதியுடன் நிலம் சேர்வதில்லை 
கடல் அலைகள் சொல்லிக் கொண்டு ஆர்ப்பதில்லை 
காற்று வழி கேட்டு அலைவதில்லை 
பருவகாலங்கள் மாற்றத்துக்குக் காத்திருப்பதில்லை 
இயற்கையின் பொதுமுறைச் சமநிலையை 
சைகைகளால் கைகோர்த்து சேர்ந்தே ஆள்கின்றன 
பேதங்களும் வாதங்களும் 
ஆதிக்கங்களும் அடித்து வீழ்த்துதல்களும் 
துரோகங்களும் பல்லிளிப்புக்களும்
சொல்லவியலாச் சுயநலன்களுமாய்
பொதிகளைச் சுமந்து வருந்தி நலிந்து 
முட்டி வலிக்க நிற்கின்றோம் 
ஒருமைக்குள் வரவியலாமல்
மனிதர்களின் பெயரால்.

வி.அல்விற்.
11.06.2014.

இங்கேயே இன்னும்......

இங்கேயே இருக்கிறேன் 
அறிவின் புகுதலின்றி 
அரங்கேறும் ஆர்வலரின் 
நவரசம் காணவே 
இன்னும் இருக்கிறேன் 

பட்டு வீழும் நீர்த்துளியாய்
விழுந்து சேற்றுடன் கரைந்து
அழுக்காறாய் ஓடுகிறது
நேர்மையின் மூலம்

நியாயம் நியாயமாய் இல்லை
சட்டம் அமுலில் இல்லை
உண்மை பொய் பேசுகிறது
கயமை கபடமாடுகிறது

இங்கே எதுவும்
அதுவாயில்லை
அதுவாயில்லாத எதையும்
எதிர்க்க துணிவின்றி
நானும்
பார்வையாளருள் ஒருவராய்
இங்கேயே இன்னும்......

வி.அல்விற்.
08.06.2014.

Photo : இங்கேயே இருக்கிறேன் 
அறிவின் புகுதலின்றி 
அரங்கேறும் ஆர்வலரின் 
நவரசம் காணவே 
இன்னும் இருக்கிறேன் 

பட்டு வீழும் நீர்த்துளியாய் 
விழுந்து சேற்றுடன் கரைந்து 
அழுக்காறாய் ஓடுகிறது 
நேர்மையின் மூலம்

நியாயம் நியாயமாய் இல்லை 
சட்டம் அமுலில் இல்லை 
உண்மை பொய் பேசுகிறது 
கயமை கபடமாடுகிறது  

இங்கே எதுவும் 
அதுவாயில்லை
அதுவாயில்லாத எதையும் 
எதிர்க்க துணிவின்றி 
நானும் 
பார்வையாளருள் ஒருவராய்  
இங்கேயே இன்னும்......

வி.அல்விற்.
08.06.2014.

உயிர் மூச்சாகி.....

உயிர் மூச்சாகி.....

பாலைவன தகிப்பில் கண்ட 
பாயுமாற்று வெள்ளம் நீ 
பாய்ந்தெழுந்து முக்குளித்துனில் 
பாகாய்க் கரைந்திருந்தேன் 

நான் என்பது ஒழிந்து கொள்ள
நாற்புறமும் நீயாய் நிறைந்திருந்தாய்
நாதமென இசைத்துக் கொண்டு
நாட்டியமாட விட்டாய்

மேவியே நிற்கின்றாய் எனை
மூடியே பொழிகின்றாய்
மேனி சிலிர்த்து பெருமிதம் காட்ட
மெய் குலுங்கி நகைக்கிறாய்

என்ன பந்தமிது எனக்கும் உனக்கும்
எட்டப் பறக்கும் பட்டம் போல
விட்டு விடாதே நூலை எக்கணமும்
நூலறுகினும் பட்டம் கிழியினும்
மூச்சொன்று இங்கே நின்று விடும்.

வி.அல்விற்.
06.06.2014.

Photo : உயிர் மூச்சாகி.....

பாலைவன தகிப்பில் கண்ட 
பாயுமாற்று வெள்ளம் நீ  
பாய்ந்தெழுந்து முக்குளித்துனில்  
பாகாய்க் கரைந்திருந்தேன் 

நான் என்பது ஒழிந்து கொள்ள  
நாற்புறமும் நீயாய் நிறைந்திருந்தாய் 
நாதமென இசைத்துக் கொண்டு 
நாட்டியமாட விட்டாய் 

மேவியே நிற்கின்றாய் எனை 
மூடியே பொழிகின்றாய் 
மேனி சிலிர்த்து பெருமிதம் காட்ட 
மெய் குலுங்கி நகைக்கிறாய் 

என்ன பந்தமிது எனக்கும் உனக்கும் 
எட்டப் பறக்கும் பட்டம் போல 
விட்டு விடாதே நூலை எக்கணமும்  
நூலறுகினும் பட்டம் கிழியினும் 
மூச்சொன்று இங்கே நின்று விடும்.

வி.அல்விற்.
06.06.2014.

வருவாயோ

விடுமலர் கூடி 
விடாய் தீர்த்து விட்டு 
விடாதம் தீர்வதற்குள் 
வேறிடம் செல்வாயோ 
விடியலில் மீண்டும் 
வேண்டி வருவாயோ 

வி. அல்விற்.
05.06.2014.

Photo : விடுமலர் கூடி 
விடாய் தீர்த்து விட்டு 
விடாதம் தீர்வதற்குள் 
வேறிடம் செல்வாயோ 
விடியலில் மீண்டும் 
வேண்டி வருவாயோ 

வி. அல்விற்.
05.06.2014.

பேசாப் பொருள்

லண்டன் வானொலி  (ilc tamilradio.com) "இலக்கியப் பூக்கள்" நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டது 


பேசாப் பொருள் 

கருமேகங்களுள் மறைந்திருக்கும் 
நீர்த்திவலைகள் போல
குளிர்விக்கும் இளமையில் 
உன்னை அறியாத காலமொன்று 
அவனுக்குள் கடந்து விட்டிருக்கிறது

பேசப்படு பொருள்கள் மூடப்பட்டு
பதில் கிடையாத முடிவுடன்
மௌன அறைக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன
சொல்ல முடியாத காதல் போல

பாதுகாப்பும் பிரமாண்டங்களும்
மென் காற்றில் தகர்க்கப்பட
போடப்பட்ட சுயவேலிக்குள்
அவன் முடங்கிக் கொள்ளுகையில்
நீ சட்டங்கள் படித்துக் கொண்டிருந்தாய்

இயலுமைகளும் இயலாமைகளும்
தெரிவின்றி நெட்டித் தள்ளிவிட
வாழ்க்கைச் சமுத்திரத்தில்
அமிழ்ந்தெழுந்து அமிழ்ந்தெழுந்து
நீந்துவதற்குப் பழகியிருக்கிறான்

நீ பட்டம் பெற்றுத் திரும்புகையில்
அவன் கரை சேர்ந்திருக்கிறான்
இனி பேசப்படாத பொருள்கள் பேசப்படலாம்
பதில்களும் விரும்பியபடி கிடைக்கலாம்
ஆனாலும்........
அவன் உன்னை அறியக் காலம் எடுக்கலாம்.

வி.அல்விற்.
02.06.2014.




Photo : பேசாப் பொருள் 

கருமேகங்களுள் மறைந்திருக்கும் 
நீர்த்திவலைகள் போல
குளிர்விக்கும் இளமையில்  
உன்னை அறியாத காலமொன்று   
அவனுக்குள் கடந்து விட்டிருக்கிறது

பேசப்படு பொருள்கள் மூடப்பட்டு
பதில் கிடையாத முடிவுடன்  
மௌன அறைக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன 
சொல்ல முடியாத காதல் போல 

பாதுகாப்பும் பிரமாண்டங்களும் 
மென் காற்றில் தகர்க்கப்பட 
போடப்பட்ட சுயவேலிக்குள் 
அவன் முடங்கிக் கொள்ளுகையில் 
நீ சட்டங்கள் படித்துக் கொண்டிருந்தாய் 

இயலுமைகளும் இயலாமைகளும்
தெரிவின்றி நெட்டித் தள்ளிவிட  
வாழ்க்கைச் சமுத்திரத்தில்  
அமிழ்ந்தெழுந்து அமிழ்ந்தெழுந்து 
நீந்துவதற்குப் பழகியிருக்கிறான் 

நீ பட்டம் பெற்றுத் திரும்புகையில் 
அவன் கரை சேர்ந்திருக்கிறான் 
இனி பேசப்படாத பொருள்கள் பேசப்படலாம் 
பதில்களும் விரும்பியபடி கிடைக்கலாம் 
ஆனாலும்........ 
அவன் உன்னை அறியக் காலம் எடுக்கலாம்.

வி.அல்விற்.
02.06.2014.

குளிருறைந்த....

குளிருறைந்த குரலினின்று
மீண்டெழுந்த காலத்தில்
உன்னத இசையெழுப்பும்
மெய்மறந்த இனிமையில்
மெருகிழந்த மரங்களும்
துளிர்த்தெழுந்து கேட்கின்றன 
இன்னும் மிச்சமிருக்கும்
நம்பிக்கையின் கொக்கிகளை.

வி.அல்விற்.
01.05.2014.
photo: Patrick CASAERT.

பின்னணி இசை

பனி மூடிய மந்தமும் 
இருள் கலந்த நிலமுமாயான 
கலங்கு நிலையின் 
சலிப்பின் முடிவினில் 
துளிர்விடும் காலங்களின் 
காத்திருத்தலின் விடுகதையில் 
எங்களோடு
கூடவுள்ளவையும்
பின்னணி இசைகளாய்.

வி.அல்விற்.
photo: Patrick Cacaert