வெள்ளி, 27 ஜூன், 2014

தூரங்கள் கடப்பாய்.

பெண்ணே!
உன் கண்கள் காவியம் பேசட்டும் 
காரியமும் அத்தோடு கூறட்டும் 
உன் நா கனிமொழி பேசட்டும் 
அதில் நேர்மை என்றுமே தெறிக்கட்டும் 

உன் நாசி நாசத்தை முகரட்டும் அதில் 
நாசனை எதிர்கொள்ளும் மூச்சிருக்கட்டும்
நலமே நெஞ்சினில் நிறையட்டும் 
நஞ்சு கொள் நெஞ்சத்தை மிதிக்கட்டும் 

பெண்ணெனும் பாவனை முடியட்டும்
பேதமைப் பொருளெனும் கூச்சல் அடங்கட்டும்
பொன்னெனத் தூக்கி பொத்திடும்
பொல்லாதோர் மூர்க்கம் அடக்கட்டும்

விண்ணெட்டும் சாதனை ஓங்கிடும்
வெறுப்பவர் இயலாமை ஒழியட்டும்
வீணென்று வீழ்த்திட எழுந்திடும்
வீணர்கள் உன் முன்னே வீழட்டும்

உன் கை ஊன்றி எழுந்திடு
உன் காலில் பலமாய் நின்றிடு
சிந்தையை முன்னோக்கி நகர்த்திடு
ஏளனம் செய்வோரை தாண்டிடு
எட்டிடும் ஏராள தூரங்கள்.

வி.அல்விற்.
19.06.2014.

கருத்துகள் இல்லை: