திங்கள், 13 அக்டோபர், 2014

ஞெகிழ்ந்தாடுதே

கொஞ்சு முகில் கூடி மிஞ்சி வீழுமுன் 
ஞிமிறதன் ஞஞ்ஞை யொழிந்து ஞாழிசைக்க 
ஞமலி அகவல் ஆங்கே ஞரல பின் 
பீலி விரித்தேகி ஞயமொடு யான் யாசித்த
ஞால வரங்கமதில் ஞெகிழ் ந்தாடுதே


* (முகில்கள் கொஞ்சிக் கூடி நீர்த்திவலையாய் மண்ணில் வீழ ஆலோசிக்கும் வேளையில் வண்டுகளின் பின்னிசையுடன் அகவிக் கொண்டு, மயிலானது தன் மயிற்தோகையை ஒயிலாய் விரித்து, நான் வேண்டிக் கேட்ட தன் ஆட்டத்தை பூமியை அரங்கமாக்கி மலர்ந்தாடுகின்றது).

வி. அல்விற்.11.10.2014.

கருத்துகள் இல்லை: