செவ்வாய், 28 அக்டோபர், 2014

உயர் நட்பு.

உயர் நட்பு.

நம்பினாய்
ஆயிரம் யானைப் பலம்
உன் நட்பில் உண்டென்று
நீ போட்ட சோற்றைத் தவிர
அடுக்களையில் மீதமிருந்த
அரிசியையும் கவர்ந்தனர்
நீ வெளியேறிய கணத்தில்
உரிந்தெடுத்தனர்
உனதாயுதம்
அகிம்சை என்று அறிந்து
உனது நட்பின் பெயரால்
மானிடரின் பெயரால்
அடி வாங்கி மறுகன்னம்
காட்டிய பிதாமகன் போல
நீ குருதி சிந்துகையில்....
இவர்கள் யுத்த வியூகம்
வகுத்துக் கொண்டிருந்தார்கள்
உனது முதுகை
குதிரையாக்கியவாறு
தெரிந்தும் தெரியாமலேயே
உன் மௌனக் குமிழ்களுக்குள்
உனக்கு நீயே
குழி வெட்டிக் கொண்டிருந்தாய்
யாவும் கடந்ததாய்.

வி.அல்விற்.
28.10.2014.

கருத்துகள் இல்லை: