திங்கள், 6 அக்டோபர், 2014

அசாத்தியம்.

அசாத்தியம்.
தவிர்த்து விடுதல் என்பது
சாத்தியமற்ற ஒன்றாகி விடுகிறது
நம் இருப்புக்குள்ளே 
ஒன்றாகி இரண்டாகி பலவாகி
இறுக்கியுள்ள கயிறுகளை
அறுத்து விடுதல்
சாத்தியத்துக்குள்
அசாத்தியமாகி விடுகிறது
இதுவரை சொன்னவைகள்
இறுதியானவையாய்
இருக்க வேண்டும் என்று
மனதார விரும்புகின்றேன்
மெது மெதுவாகப் பாசி படிந்து
வழுக்கல் நிலைக்கு மாறியுள்ள
வாழ்நிலத்தில்
பெருவிரல் பட்டாலும்
வீழ்த்தி விடும் அபாயம்
தோன்றியுள்ளது
தீக்குச்சி உரசலில்
சகலமும் எரிந்து விடும்
அபாயம் கடத்தப்பட வேண்டும்
புனிதங்கள் புதினங்களாகாது
அகமர்ந்திட வேண்டும்
குறைநிலை அல்லாத
மானிடன் யார்?
தூக்கிப் போடும்
இலகு நிலை விடுத்து
தூக்கி நிறுத்தும் அறிவுநிலை தேடு
தவிர்த்து விடுதல் என்பது
அங்கே அசாத்தியமாகும்.
வி. அல்விற்.
05.10.2014.

கருத்துகள் இல்லை: