வெள்ளி, 17 ஏப்ரல், 2015

காலம்

காலம்.

இதோ!

உன் அருகிலேயே நான் 
இரை தேடும் கழுகு போல
வட்டமிட்டுக் காத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமலேயே.

உனக்கான வாழ்வின் மாற்றங்களை
முடியுமானால் 
முயற்சித்துத் திருத்திக் கொள்.

பயம் ஒன்றே போதுமாயிருக்கிறது
அத்தனைக்கும்.

மன்னிக்க முடியுமா
மன்னித்துக் கொள்

அன்பாயிருத்தல் இயலுமா
இருந்து கொள் 

உன் பெற்றோரைக் 
கவனித்துக்கொள்ள முடியுமா
ஒரு நற்குழந்தையாகி விடு

எனது வருகை 
உனக்குத் தெரியாத பொழுது
அமைந்து விடின் 
உனது இல்லம் 
எப்படி இருக்கும் 

அலங்கோலமான வரவேற்பறையுடன்
சங்கடப்பட்டு வரவேற்பாயா?

எல்லோருக்கும் சாத்தியமான
அந்த நாளை

நான் உன்னை
கை தொடும் பொழுது
உன் மூச்சு அமைதியாகும்

உனது காலம் தெளிவாக அமைந்திருந்தால்.

வி. அல்விற்.

06.04.2015.

கருத்துகள் இல்லை: