புதன், 8 ஏப்ரல், 2015

மறுதலிப்பு

மறுதலிப்பு.

ஒன்றாய் கதை பேசியிருந்தோம்
ஒன்றாய் சேர்ந்து உண்டிருந்தோம்
ஒன்றாய் உள்ளதைப் பகிர்ந்திருந்தோம் 
ஒன்றாய் பாயில் உறங்கியிருந்தோம்
ஒன்றாய் மதிப்பை அளித்திருந்தோம்
ஒன்றாய் வெற்றியில் திளைத்திருந்தோம்
ஒன்றாய் தோல்வியில் வாடியிருந்தோம்
ஒன்றாய் சுமைகள் சுமந்திருந்தோம்
ஒன்றாய் இருந்த காலங்கள் 
நன்றாய்த்தான் நகர்ந்திருந்தன 

கொன்றப்பொழுதுகள் வீழ்ந்த வேளை
அன்றப்பொழுதின் பேதுருபோல
இன்றிப்பொழுதில் மறுதலிக்கிறோம்
சென்றிப்பொழுதில் தனைத் தப்பிக்க
என்றெப்பொழுதும் பின்னழுவதற்காய்.

வி.அல்விற்.

03.04.2015.

கருத்துகள் இல்லை: