புதன், 25 ஏப்ரல், 2012

ஈகம்

par Alvit Vincent, mercredi 18 avril 2012, 21:56
பிறப்பின் முன்
எத்தனை சோதனைகள்
இடப் பெயர்வுகள்
துரத்தல்கள்

பிறந்ததும் மாந்தர்
குடியிராதோர் இடத்தில்
யாருமறியாவிடத்தில்
தொடர்ந்தும் வேதனைகள்

சொல்லெறியாம் கல்லெறிபட்டு
சொல்லொணா துன்பப்பட்டு
நம்பியவர்களால் கைவிடப்பட்டு
ஒரு மணி கூட பங்கெடுக்க முடியாதவர்களை
ஒன்றாய் வைத்திருந்து

மரண வேதனையை தனியே
மன்றாடித் தன்னுயிர் ஈந்து
இத்தனையும் மானிடன்
பாவங்களுக்காய் சுமந்தேன்
இவர்கள் அறியாமையைப் பொறுத்தருளும்
என்றவரே

இம்மானிடப் பாவங்கள் குறைந்தனவா?
மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்தனவா?
புரியவில்லை
மாறாக "கண்ணில்லையா கடவுளுக்கு "
எனும் சொற்கள் அடிக்கடி கேட்கின்றன
ஏனென்றால் கடவுள் பேசுவதில்லை .

 

கருத்துகள் இல்லை: