புதன், 25 ஏப்ரல், 2012

புதுயுகம் நோக்கி


par Alvit Vincent, vendredi 20 avril 2012, 12:23 ·

நடை போடுவோம் வீரநடை போடுவோம்
புதுயுகம் நோக்கும் தமிழீழம் நோக்கி
நடை போடுவோம்  வீர நடை போடுவோம்

கனவுகள் கண்களில் தேங்கியே நிற்க
தமிழீழம் எதிரிலே நிலைகுத்தி நிற்க
தம்முயிர் எதிர்நோக்கியே நீத்த
எம்முயிர் சோதரர் நனவாக்கிட  (நடை..)

தவமிருந் தீன்றேடுத்து  தாய் மண் விட்டு
தத்தெடுத்த புல வளங்களை கண் கொண்டு
தன்னழ கிழந்த தாய் நாட்டை சீர் தூக்கி
தன்னிறைவடைய எம்மிரு கை தூக்கி (நடை...)

யுத்த ரத்தம் ஆறாய் சத்தமாய்  ஓடுதே
எத்தனை பேர் தம் அங்கங்கள் நீங்க
எண்ணற்ற மனிதர் உறவுகள் இழக்க
முடியும் எம்மால் கை நீட்டி தூக்கி விட  (நடை..)

சரித்திரம் கோடிட்ட நாயகியர் எத்தனை
சமரிட்டு வெற்றி கண்ட பெண்கள் எத்தனை
பாவையரா இவரென்று பாட வைத்தோர் எத்தனை
பாரெலாம் பார்க்க பாதையிட்டோர் அடிதொடர்ந்து (நடை..)

கருத்துகள் இல்லை: