புதன், 25 ஏப்ரல், 2012

உயிர்ப்பு

par Alvit Vincent, mercredi 18 avril 2012, 22:00
குழந்தையின் பிறப்பில்
குடும்பத்தின் உயிர்ப்பு
உற்றாரின் அரவணைப்பில்
உறவுகளின் உயிர்ப்பு

மலர்களின் விரியலில்
மணத்தின் உயிர்ப்பு
கார் மேக கூட்டங்களில்
மழையின் உயிர்ப்பு

நேற்றைய இறப்பில்
இன்றைய உயிர்ப்பு
தேடலின் தொடர்வில்
அறிவின் உயிர்ப்பு

கோபங்களின் முடிவில்
மன்னிப்பின் உயிர்ப்பு
பொறுத்தலின் உயர்வில்
மனிதத்தின் உயிர்ப்பு

ஜேசுவின் இறப்பில்
உண்மையின் உயிர்ப்பு
விடுதலையின் உயிர்ப்பு


கருத்துகள் இல்லை: