புதன், 25 ஏப்ரல், 2012

இரசிப்பு


par Alvit Vincent, samedi 21 avril 2012, 23:09
 
 
கடந்ததை அசை போடுவதும்
கடுகி மனம் சலிப்பதுவும்

கனவுகளைக் கொண்டு
நனவாக்கத் துடிப்பதும்

நடக்கின்ற நிகழ்வுகளில்
நன்மை தேட நினைப்பதுவும்

நாளைக்காய்  இன்றே
நலிந்தொடிந்து  வாடலும்

எறும்பாய் ஓடி
சேர்த்துக் காப்பதிலும்

காலத்தை சுழர விட்டு
கலங்கும் மனிதா!

காலைச் செவ்விளங்கதிரும்
களங்கமில்லா வெண்மதியும்

மென்நீல வான் வெளியும்
எண்ணச் சொல்லும் தாரகைகளும்

பனிச் சிலிர்ப்பின் புல்வெளியும்
வசந்தத்தின் சுகந்தமும்

குருவிகளின் இன்னிசையும்
பரந்திருக்கும் கடலோசையும்

மலைகளின் வான்தொடலும்
அருவிகளின் ஆர்ப்பரிப்பும்

உனைப் பார்த்துக் கேட்கின்றன
ஒரு நிமிடம் நின்றெம்மை

கணங்களை மூடிக்கொண்டு
மூச்சை உள்ளெடுத்து

எப்போது இரசிக்கப் போகின்றாய் என்று

கருத்துகள் இல்லை: